Posts

தமிழ்நாடு மின்வெட்டு

Image
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மின்வெட்டு தொடர்வதற்கும் அதிகரிப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. எதிர்கால மின்தேவையை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்படவில்லை. பராமரிப்பு, விநியோகத்தில் மின்வாரிய அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. புதிய மின்னுற்பத்திக்கான இடங்களையும் வழிமுறைகளையும் அடையாளம் காண மாநிலத்தில் தனி ஆராய்ச்சிப்பிரிவு ஏதும் இல்லை. மின் சிக்கனம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி வருகிறோம்.  மின்வெட்டு அதிகமாக இருக்கும் இக்காலத்திலும் தெரு விளக்குகளை காலையில் வெளிச்சம் நன்கு ஏற்பட்ட ஒரு மணி நேரம் கழித்தபிறகு கூட அணைக்காமல் விரயம் செய்கின்றனர். அதிக மின்சாரத்தை இழுத்து ஒளியைத் தரும் சோடியம் ஆவி விளக்குகள், மெர்க்குரி விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன.  இவற்றை மாற்றி, குறைந்த மின்சாரத்தில் அதிக ஒளிதரக்கூடிய எல்.இ.டி., பவர் சேவர் சி.எஃப்.எல். விளக்குகளைப் பொருத்தலாம். சூரிய சக்தியில் ஒளிதரும் சோலார் லேம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதனால் 500 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படும்.  சமையல் கேஸ் சப்ளையை மத்திய அரசு குறைத்துவருவதால் எல்லோரும் மின

வரலாறு சிறப்பு

Image
     ஃபேரி டேல்  என்பது ஒரு வகைக் கதை கூறலைக் குறிக்கும்  ஆங்கில மொழி  சொல்லாகும்.     இதன் ஜெர்மானிய, ஸ்வீடன் மொழிச்சொல் அல்லது இத்தாலியச் சொல் ஆகியவை முறையே  மார்ச்சன்  (Maerchen),  சாகா  (saga) மற்றும்  ஃபியாபா  (fiaba) ஆகியவையாகும். சிறு எண்ணிக்கையிலான கதைகள் மட்டுமே பிரத்யேகமாக விசித்திரக் கதைகள் என்ற வகையின் கீழ் உட்படுத்தப்படுகின்றன. இருப்பினும், செவிவழிக் கதைகள், பாரம்பரியக் கதைகள் (பொதுவாக விவரிக்கப்படும் நிகழ்வுகளைப் பற்றிய உண்மை கூறலைப் பற்றிய கதைகள்) [1]  போன்ற பிற நாட்டுப்புறக் கதைகள் மற்றும் விநோத உயிரிகளைப் பற்றிய கதைகள் உள்ளிட்ட சிறப்பான நீதிக் கதைகள் போன்றவற்றை இவற்றிலிருந்து வேறுபடுத்த முடியும். விசித்திரக் கதைகளில் வழக்கமாக, தேவதைகள், குட்டிச்சாத்தான்கள், குறும்புக்கார தேவதைகள், நட்பு தேவதைகள், பூதங்கள் அல்லது குட்டி மனிதர்கள் போன்ற நாட்டுப்புறக் கதைக் கதாப்பாத்திரங்களும், மாயாஜாலங்கள் அல்லது மந்திரங்களும் இடம்பெறும். பெரும்பாலும் இந்தக் கதைகள் கற்பனைத்தனமான சம்பவங்களின் தொடர்ச்சியைக் கொண்டவையாக இருக்கும். குறைந்தபட்ச தொழில்நுட்பச் சூழலில் இந்தச் சொல்லானது &quo

நானும் வந்துட்டேன் பதிவுலகத்திற்கு

Image
என்  பெயர் சல்மான். நான் தற்பொழுது கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு படிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். நான் முக நூல் ஆரம்பித்த பிறகு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அந்த முக நூலின் வழியாக எனக்கு பரிச்சயம் ஆனது தான் இந்த ப்ளாக். முக நூலில் நெறைய நபர்கள் தங்களுடைய கருத்தினை எழுதி இருந்தார்கள். அதை படித்த பொழுது பயனுள்ள தகவல்களும், எனக்கு தெரியாத அறிவான தகவல்களும், சிறந்த நகைச்சுவைகளும், கதைகளும், கட்டுரைகளும், தேச தலைவர்களின் வாழ்கை வரலார்களும் அறிந்து கொண்டேன். அதன் விளைவாக நான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு எனக்கு இது போன்று ஒரு ப்ளாக் உருவாக்கி கேட்ட பொழுது எனது உடன் பிறவா சகோதரி இந்த தளத்தை உருவாக்கி தந்தார். இனி நான் படித்தவற்றையும் சிரித்தவற்றையும் பதிவிடலாம் என்று எண்ணி உள்ளேன். இனி எனது அதிரடி தொடரும் உங்கள் ஆக்கமும் ஊக்கமும் வேண்டி தொடர்கிறேன். சுய அறிமுகம்;  பெயர்; சல்மான் [சல்மான் கான் ஆகனும்னு ஆசை இருக்கு] ஊர்;லண்டன் [நம்பவா போறீங்க] கல்வி; படிச்சிகிட்டே இருக்கேன் தொழில்; தேடிகிட்டு இருக்கேன்  பிடித்தது;பிரியாணி,சிக்கேன் தந்துர